கடற்படைக்கு ரஃபேல் வாங்க திட்டமா, கடல்சார் ரஃபேலை சோதிக்க உள்ள இந்தியா !!

  • Tamil Defense
  • January 3, 2022
  • Comments Off on கடற்படைக்கு ரஃபேல் வாங்க திட்டமா, கடல்சார் ரஃபேலை சோதிக்க உள்ள இந்தியா !!

ஃபிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனம் தயாரித்த போர் விமானங்களில் ஒன்று தான் ரஃபேல் இந்தியா ஏற்கனவே விமானப்படைக்கு 36 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது.

தற்போது ரஃபேல் விமானத்தின் மற்றொரு வடிவமான ரஃபேல்-எம் ரக போர் விமானத்தை இந்திய கடற்படை சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவாவில் உள்ள கடற்படையின் ஐ.என.எஸ். ஹன்ஸா தளத்தில் ரஃபேல் எம் ரக கடல்சார் போர் விமானங்களை ஜனவரி 6 முதல் சோதிக்க உள்ளது.

ஆகஸ்ட் மாதம் ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலை இந்திய கடற்படை படையில் இணைக்க தயாராகி வரும் நிலையில் அந்த 40,000 டன் கப்பலுக்கு ஏற்ற போர் விமானத்தை தேர்வு செய்யும் பணிகள் துவங்கி உள்ளன.

இந்த சோதனைகள் 283 மீட்டர் நீளம் கொண்ட ஒடு பாதையில் 12 நாட்களுக்கு நடைபெற உள்ளதாக இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அமெரிக்க போயிங் எஃப்-18 ரக கடல்சார் போர் விமானத்தையும் இந்திய கடற்படை மேற்குறிப்பிட்ட ஹன்சா தளத்திலேயே சோதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது இந்திய கடற்படை மிக்-29, ஃபிரெஞ்சு கடற்படை ரஃபேல்-எம் மற்றும் அமெரிக்க கடற்படை எஃப்-18 ஆகிய போர் விமானங்களை பிரதானமாக பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.