
இந்தியாவின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் RAWL – 03 ரக ரேடார் தற்போது ஏற்றுமதிக்கு வெளிவந்துள்ளது.
இது ஒரு முப்பரிமாண L அலைவரிசையில் இயங்கக்கூடிய 400 கிலோமீட்டர் தொலைவு தூரத்திற்கு வான் பரப்பை கண்காணிக்கும் ஆற்றல் கொண்ட ரேடார் ஆகும்.
இந்தியாவின் பெல் மற்றும் சுவீடன் நாட்டின் சாப் ஆகியவை இணைந்து தயாரித்த இந்த ரேடார் மீது பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, கனடா, சுவீடன் மேலும் ஆஃப்ரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரேடாரை போர் கப்பல்கள் அல்லது லாரிகளில் இணைத்து பயன்படுத்தி ஏவுகணைகள் ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் ஆகியவற்றை கண்காணிக்க முடியும்.
4 டன்கள் எடை கொண்ட இந்த ரேடார் கால்லியம் நைட்ரேட் உலோகம் மற்றும் அதிநவீனமான சிக்னல் ப்ராசஸிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது மேலும் 2015ஆம் ஆண்டு பணிகள் துவங்கி 2017ஆம் ஆண்டு நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.