குடியரசு தின விழாக்களில் நேதாஜியின் பிறந்தநாளும் அடக்கம் ஜனவரி 23 முதல் 26 வரை கொண்டாட்டங்கள் !!

  • Tamil Defense
  • January 17, 2022
  • Comments Off on குடியரசு தின விழாக்களில் நேதாஜியின் பிறந்தநாளும் அடக்கம் ஜனவரி 23 முதல் 26 வரை கொண்டாட்டங்கள் !!

இந்த வருடம் முதல் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் ஜனவரி 23 முதல் 26 வரை மூன்று நாட்கள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு காரணம் இந்திய சுதந்திர போராட்டத்தில் மிக முக்கியமான பங்கு வகித்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுடைய பிறந்த நாளையும் உள்ளடக்கியதாகும்.

நேதாஜியின் பிறந்தநாளை இதற்கு முன் பராக்ரம் திவாஸ் என மத்திய அரசு அறிவித்து கொண்டாடி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.