சீனா உடனான எல்லை பிரச்சினை சார்ந்த பேச்சுவார்த்தையில் மிகுந்த கவனம் மற்றும் ஜாக்கிரதையுடன் செயல்பட இந்தியா முடிவு செய்துள்ளது.
மத்திய அரசை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பேசும்போது இந்திய சீன எல்லை பதற்றமாகவே உள்ளது எனவும் உடனடி தீர்வு ஏற்படும் என தற்காலம் எந்தவொரு அடையாளமும் இல்லை என கூறுகின்றனர்.
மேலும் விரைவில் நடைபெற உள்ள அடுத்த சுற்று கோர் கமாண்டர்களுக்கான பேச்சுவார்த்தையில் சீன தரப்பு நிலைபாட்டை தெள்ள தெளிவாக அறிந்து கொள்ள விரும்புகிறது.
கடந்த வருடம் அக்டோபரில் நடைபெற்ற பிதமுன்றாவது சுற்று கோர் கமாண்டர்கள் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.