காஷ்மீரை ராணுவ மயமாக்குவதாக முன்னாள் முதல்வர் மெஹ்பூபா மூஃப்தி மத்திய அரசு மீது குற்றச்சாட்டு !!

  • Tamil Defense
  • January 8, 2022
  • Comments Off on காஷ்மீரை ராணுவ மயமாக்குவதாக முன்னாள் முதல்வர் மெஹ்பூபா மூஃப்தி மத்திய அரசு மீது குற்றச்சாட்டு !!

முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா மூஃப்தி மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ராணுவ மயமாக்குவதாக குற்றம்சாட்டி கடுமையாக விமர்சித்து உள்ளார்.

காஷ்மீரின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளான சோனமார்க் மற்றும் குல்மார்க் ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய அளவிலான நிலங்களை இந்திய தரைப்படைக்கு அந்த மாநில நிர்வாகம் வழங்கி உள்ளது.

அதாவது இந்திய தரைப்படையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலத்தின் அளவு சுமார் 70 ஏக்கர் ஆகும் பாதுகாப்பு என்ற போர்வையில் தங்கள் நிலங்கள் பறிக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்து உள்ளார்.

ஆனால் உத்தரவில் இந்த பகுதிக்கு பொறுப்பான கோர் தளபதி சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும் என குறிப்பிடபட்டுள்ளது.