ரஷ்யா மற்றும் அமெரிக்க போர் விமான ஒப்பந்தங்களை ஒரே நேரத்தில் ரத்து செய்த இந்தியா !!

  • Tamil Defense
  • January 18, 2022
  • Comments Off on ரஷ்யா மற்றும் அமெரிக்க போர் விமான ஒப்பந்தங்களை ஒரே நேரத்தில் ரத்து செய்த இந்தியா !!

இந்தியா நீண்ட காலமாகவே சர்வதேச ஆயுத சந்தையில் மிக பெரிட வாடிக்கையாளராக இருந்து வருகிறது பல்வேறு நாடுகளிடம் இருந்து வெவ்வேறு விதமான அதிநவீன ஆயுதங்களை வாங்கி படைகளில் இணைத்து பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரே நேரத்தில் ரஷ்யாவிடம் இருந்து 21 மிக்-29 ரக போர் விமானங்கள் மற்றும் அமெரிக்காவிடம் இருந்து 6 பி8ஐ பொசைடான் நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு விமானங்களை வாங்கும் ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது.

மேலும் ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து வாங்கவிருந்த தரையிலிருந்து வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள், கா-226 மற்றும் கா-31 ஹெலிகாப்டர்கள், க்ளப் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியவை ரத்து செய்யப்பட்டும் பிரங்கிகள், ட்ரோன்கள், வான் பாதுகாப்பு ஏவுகணைகள் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டுமா எனும் பரிசீலனையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே போல அமெரிக்காவிடம் இருந்து 10 பி8 பொசைடான் விமானங்களை வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்திருந்த நிலையில் ஒன்று அவற்றின் எண்ணிக்கையை குறைக்கவோ அல்லது மொத்தமாக ரத்து செய்யவோ ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க ஆயுதங்களை ரத்து செய்தது ஆத்மநிர்பார் பாரத் திட்டத்திற்காக என கூறுப்படும் நிலையில் ரஷ்ய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கு அதிகாரப்பூர்வ காரணம் சொல்லப்படவில்லை எனினும் தேஜாஸிற்கு ஆதரவாக என தகவல்கள் தெரிவிக்கின்றன.