17 உள்நாட்டு தயாரிப்பு ஹெலிகாப்டர்களை படையில் இணைத்த இந்திய கடற்படை !!

  • Tamil Defense
  • January 29, 2022
  • Comments Off on 17 உள்நாட்டு தயாரிப்பு ஹெலிகாப்டர்களை படையில் இணைத்த இந்திய கடற்படை !!

இந்திய கடற்படை தனது திறன்களை அதிகரிக்கும் பொருட்ட முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 17 த்ருவ் மார்க்-3 ஹெலிகாப்டர்களை படையில் இணைத்துள்ளது.

அந்தமான் யூனியன் பிரதேச தலைநகரான போர்ட் ப்ளேயரில் உள்ள ஐ.என்.எஸ். உத்கோர்ஷ் எனும் கடற்படையின் விமான தளத்தில் இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்தமான் நிகோபார் முப்படை கட்டளையகத்தின் தளபதியான லெஃப்டினன்ட் ஜெனரல் அஜய் சிங் முந்நிலையில் தண்ணீர் பீய்ச்சி அடித்து ஹெலிகாப்டர்கள் வரவேற்கப்பட்டன.

நமது ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்த இவற்றில் ஷக்தி எனும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட என்ஜின், கண்ணாடியால் ஆன் விமானி அறை

இரவில் பார்க்கும் வசதி, அதிநவீனமான கடல்சார் ரோந்து மற்றும் கண்காணிப்பு ரேடார் ஆகிய வசதிகள் கொண்ட பல உபயோக/திறன் ரக ஹெலிகாப்டர்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.