வருகிற 2024-2025ஆம் ஆண்டு வாக்கில் இந்திய கடற்படை தனது அடுத்த தலைமுறை சூப்பர் நாசகாரி கப்பல்களுக்கான டிசைனை இறுதி செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கடற்படை Clean Sheet எனப்படும் டிசைனை அடிப்படையாக கொண்டு அடுத்த தலைமுறை நாசகாரி கப்பல்களுக்கான பணிகளை 2021ஆம் ஆண்டின் இடை பகுதியில் துவங்கியது.
ப்ராஜெக்ட்-18 என அழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் நாசகாரி கப்பல்கள் ஒவ்வொன்றும் தலா 13,000 டன்கள் எடையுடன் இருக்கும் மொத்தமாக ஆறு கப்பல்கள் 50,000 கோடி மதிப்பில் தயாரிக்கப்படும்.
இந்த அடுத்த தலைமுறை நாசகாரி கப்பல்களின் கட்டுமான பணிகள் 2026-2027 வாக்கில் துவங்கும் எனவும் 2032ஆம் ஆண்டில் முதல் கப்பல் படையில் இணையும் எனவும் கூறப்படுகிறது.