மொசாம்பிக் நாட்டிற்கு இடைமறிப்பு கலன்களை வழங்கிய இந்தியா !!

சமீபத்தில் மொசாம்பிக் நாட்டின் மபூட்டோ துறைமுக நகருக்கு இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். கேசரி போர்க்கப்பல் சுற்றுபயணமாக சென்றிருந்தது.

அப்போது மொசாம்பிக் கடற்படைக்கு இரண்டு சோலாஸ் அதிவேக இடைமறிப்பு கலன்களை கேசரி போர் கப்பல் டெலிவிரி செய்தது.

மேலும் மொசாம்பிக் நாட்டில் கடும் பஞ்சம் மற்றும் வறட்சி நிலவி வரும் நிலையில் 500 டன்கள் அளவிலான உணவு பொருட்களை ஐ.என்.எஸ். கேசரி போர்கப்பல் டெலிவரி செய்தது.

இது தவிர மொசாம்பிக் நாட்டு கடற்படை வீரர்களுக்கு மேற்குறிப்பிட்ட படகுகளை இயக்கவும் இலகுரக ஆயுதங்களை பயன்படுத்தவும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.