
இந்திய சீன எல்லையோரம் நடைபெற்று வரும் மோதல் போக்கு தொடர்பாகவும் படைவிலக்கம் தொடர்பாகவும் இந்திய சீன இராணுவ அதிகாரிகள் விரைவில் 15ம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எல்லையில் அமைதி நிலைநாட்டுவது தொடர்பாக இரு நாட்டு இராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இது தொடர்பான 14ம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த 12 ஜனவரியில் நடைபெற்றது.இதில் எந்த வித முடிவும் எட்டப்படவில்லை.
கல்வான் மோதலுக்கு பிறகு இருநாட்டு படைகளும் அதிக அளவு துருப்புகள் மற்றும் ஆயுதங்களை எல்லைப் பகுதியில் குவித்தன.இதன் பிறகு தற்போது வரை எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.