பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் மூன்று முக்கிய ராணுவ தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.
அதிவிரைவு வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வெளிநாடுகளில் இருந்து வாங்க இருந்த நிலையில் தற்போது உள்நாட்டிலேயே கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதை போல் ATV – ALL TERRAIN VEHICLE எனப்படும் அனைத்து நிலப்பரப்பு பகுதியிலும் பயணிக்கும் வாகனங்களையும் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்ய உள்ளனர்.
மேலும் இலகுரக இயந்திர துப்பாக்கிகள் (LMG – Light Machine Gun) ஆகியவற்றையும் இனி இந்தியாவிலேயே தயாரித்து படைகளில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.