காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி எல்லையோர பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் இந்தியா !!

  • Tamil Defense
  • January 10, 2022
  • Comments Off on காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி எல்லையோர பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் இந்தியா !!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் – ரஜோரி இடையே அமைந்துள்ள பிம்பர்காலி செக்டாரின் ஹமீர்பூர் பகுதியில் சமீபத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.

இதை தொடர்ந்து இந்தியா தனது உளவுத்துறையை முடுக்கி விட்டது மட்டுமின்றி எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் உள்ள பாதுகாப்பு கட்டமைப்பை பன்மடங்கு வலுப்படுத்த உள்ளது.

இந்திய ரா உளவு அமைப்பும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் நடைபெறலாம் என ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிம்பர் காலி செக்டாரில் உள்ள ஹமீர்பூரில் நடைபெற்ற ஊடுருவல் முயற்சியின் போது 4 பயங்கரவாதிகள் இருந்ததாகவும் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி தடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.