
பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான கேபினட் குழுவிடம் ஹெரோன் ஆளில்லா விமானங்களில் ஏவுகணைகளை பொருத்த அனுமதி கோரும் கோப்பு உள்ளது.
40 முதல் 50 மணி நேரம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த ஆளில்லா விமானங்களில் ஏவுகணைகளை இணைத்து பயன்படுத்தினால் இந்திய ராணுவத்தின் வலிமை அதிகரிக்கும்.
ஆக இரண்டு அல்லது நான்கு தரை தாக்குதல் ஏவுகணைகளை நம்மிடம் உள்ள 48 ஹெரோன் ஆளில்லா விமானங்களில் இணைக்க ராணுவம் விரும்புகிறது, டாங்கி எதிர்ப்பு, பங்கர் அழிப்பு என எந்த வகை ஏவுகணையையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இது தவிர சுமார் 32 ஹெரோன் ட்ரோன்களை மேம்படுத்தி அவற்றில் செயற்கை கோள் தகவல் தொடர்பு வசதியையும் இணைக்க ராணுவம் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல ஆண்டுகளாக இந்திய விமானப்படை மற்றும் தரைப்படை ஆகியவை இந்த ட்ரோன்களை உளவு பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றன தற்போது இவற்றின என்ஜின்களையும் தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.