கண்காணிப்பு ரேடார் ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி

  • Tamil Defense
  • January 2, 2022
  • Comments Off on கண்காணிப்பு ரேடார் ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி

400கிமீ வரை கண்காணிக்க கூடிய Rawl-03 என்ற வான் கண்காணிப்பு ரேடாரை நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.

Bharat Electronics Limited (BEL) நிறுவதனத்தின் அதிகாரிகள் இதுகுறித்து கூறும் போது இந்த L-Band 3D Air Surveillance Radar RAWL-03 ரேடாரை பெற நிறைய நாடுகள் விரும்புவதாக கூறியுள்ளனர்.

வான் மற்றும் தரையில் வரும் இலக்குகளை கண்டறிந்து சுடும் அமைப்புகளுக்கு தகவல் தந்து இலக்குகளை வீழ்த்த இந்த நெடுந்தூர குறைந்த செலவுடைய ரேடார் உதவும்.இந்த ரேடாரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த ரேடாரை கப்பல் மற்றும் தரையில் உபயோகிக்க முடியும்.இந்திய கடற்படையில் இந்த ரேடாரை இணைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

எந்த நாடுகள் இந்த ரேடாரை பெற விரும்பம் தெரிவித்தன என்பது குறித்த தகவல்களை நிறுவனம் வெளியிடவில்லை.சில ஐரோப்பிய நாடுகள், வளர்ந்து வரும் ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகள் ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

400கிமீ தூரத்தில் வரும் ஏவுகணைகள்,வானூர்திகள் மற்றும் விமானங்களை கண்காணிக்க இந்த ரேடார் உதவும்.இந்த தகவல்களை சுடும் அமைப்புகளுக்கு ( Fire control systems) வழங்குவதின் மூலம் இந்த இலக்குகளை வீழ்த்த முடியும்.