
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் படையினர் புத்தாண்டை முன்னிட்டு இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.
2022ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் புரிதல் மற்றும் அமைதியை ஊக்குவிக்கும் வகையில் பூஞ்ச் மற்றும் மேந்தார் பகுதிகளில் இனிப்புகளை பரிமாறி கொண்டதாகவும்
இந்திய பாகிஸ்தான் எல்லையோரம் தற்போதுள்ள சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு நல்லெண்ணம் மற்றும் அமைதியை ஊக்குவிக்க இது உதவும் எனவும் தரைப்படை செய்தி தொடர்பாளர் லெஃப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் தெரிவித்தார்.
கடந்த 2020 ஃபெப்ரவரி மாதம் முதலாக கடந்த 2021 ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் சுமார் 740 முறைகள் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2003ஆம் ஆண்டிற்கு பிறகான காலகட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டில் தான் முதல்முறையாக எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் அமைதி நிலவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.