
IN301 என்ற எண் வரிசை கொண்ட இந்திய கடற்படையின் முதலாவது IL38SD ரக விமானம் சுமார் 44 ஆண்டு கால சேவைக்கு பின்னர் படையில் இருந்து விலக்கப்பட்டது.
இந்த ரக விமானங்கள் தான் இந்திய கடற்படையின் முதலாவது தொலைதூர கண்காணிப்பு நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் எதிர்ப்பு சிக்னல் உளவு தேடுதல் மற்றும் மீட்பு விமானமாகும்.
1977ஆம் ஆண்டு படையில் இணைந்த பின்னர் சுமார் 10,000 மணி நேரம் பறந்துள்ள இந்த விமானம் தனது சேவைக்காலத்தில் இந்திய கடற்படையின் தவிர்க்க முடியா சொத்தாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி 17ஆம் தேதி நடைபெற்ற விழாவில் இந்த விமானம் படையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.