காஷ்மீரில் பெரும் சவாலாக இருக்கும் போதை பொருள் மற்றும் ஹைபிரிட் பயங்கரவாதிகள் !!

  • Tamil Defense
  • January 18, 2022
  • Comments Off on காஷ்மீரில் பெரும் சவாலாக இருக்கும் போதை பொருள் மற்றும் ஹைபிரிட் பயங்கரவாதிகள் !!

இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹைபிரிட் பயங்கரவாதம் மற்றும் போதை பொருள் கடத்தல் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு பெரும் சவாலாக இருக்கும் என காவல்துறை மூத்த அதிகாரி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

மக்களுடன் மக்களாக கலந்து இருக்கும் பயங்கரவாதிகள் தீடிரென வெளிவந்து தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் மக்களுடன் மக்களாக கலந்து விடுகின்றனர் இவர்களை தான் ஹைபிரிட் பயங்கரவாதிகள் என அழைக்கின்றனர்.

இவர்கள் இப்படி கடந்த ஆண்டில் தீடிரென ஆசிரியர்கள், வியாபாரிகள், காவலர்கள், கடை உரிமையாளர்கள் மீது நடத்திய தாக்குதலில் பலர் உயரிழந்தனர் இதனை தான் ஹைபிரிட் பயங்கரவாதம் என கூறுகின்றனர்.

இது தவிர எல்லைக்கு அப்பால் இருந்து கடத்தி வரப்படும் போதை பொருட்கள் ஜம்மு காஷ்மீரில் விற்பனை செய்யபட்டு அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பயங்கரவாதிகளின் ஆயுதங்கள் வாங்கபடுகின்றன.

இப்படி கல்லூரி மாணவர்கள் மற்றும் காஷ்மீரிகள் போதை பொருட்களுக்கு அடிமையாவதோடு மட்டுமின்றி பயங்கரவாத இயக்கங்ளுக்கு வருமானமும் இப்படி தான் கிடைக்கிறது.

இதனை ஒடுக்க ராணுவம் துணை ராணுவ படைகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஆகியவை இணைந்து தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.