இந்திய கடற்படைக்கு 200ஆவது கலனை வழங்கிய ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான தளம் !!

  • Tamil Defense
  • January 9, 2022
  • Comments Off on இந்திய கடற்படைக்கு 200ஆவது கலனை வழங்கிய ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான தளம் !!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான தளம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

அதாவது இந்திய கடற்படைக்கு 200 ஆவது கலனை கட்டி வழங்கியுள்ளது 1000 கோடி ரூபாய் மதிப்பில் 50 டன்கள் எடை கொண்ட இந்த கலன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்பீர் என பெயரிடப்பட்டுள்ள இந்த பொல்லார்ட் ரக இழுவை படகு இந்திய கடற்படையில் மும்பையில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படையில் இணைக்கப்பட்டது.

தற்போது 20,000 கோடி ரூபாய் மதிப்பில் ஐந்த கடற்படையணி உதவி கலன்களை கட்டி வழங்கும் ஒப்பந்தத்தை இறுதி செய்து ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான தளத்திற்கு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது கூடுதல் தகவல்.