புதிய அதிநவீனமான சண்டையிடும் சுதேசி அமைப்பை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ள HAL !!

  • Tamil Defense
  • January 3, 2022
  • Comments Off on புதிய அதிநவீனமான சண்டையிடும் சுதேசி அமைப்பை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ள HAL !!

ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் நாட்டிற்கு புதிய அதிநவீனமான வானில் சண்டையிடும் தொழில்நுட்பத்தை நாட்டிற்காக அர்ப்பணிக்க விரும்புகிறது.

இந்த நூற்றாண்டு தொடங்கிய போது ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களின் யுகமும் தொடங்கியது தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல நகரந்து ஆளில்லா விமானங்களின் காலத்தை நோக்கி பயணித்து வருகிறோம்.

தற்போதைய ஆளில்லா விமானங்கள் பல்வேறு வகைகளில் போர் விமானங்களை விடவும் திறன் குறைந்தவையாக தான் உள்ளன ஆனால் போர் விமானங்களை போன்றே இயங்கும் ட்ரோன்களை உருவாக்கும் ஆய்வுகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் நமது HAL நிறுவனமானது CATS – Combat Air Teaming System எனப்படும் மனிதர்கள் இயக்கும் மற்றும் மனிதர்களின் உதவியின்றி இயங்கும் ட்ரோன்கள் ஒரே அணியாக செயல்படும் அமைப்பை உருவாக்கி வருகிறது.

அதன்படி நமது தேஜாஸ் மற்றும் ஐந்தாம் தலைமுறை ஆம்கா ஆகிய போர் விமானங்களை இயக்கும் விமானிகளின் வழிகாட்டுதல்படி இந்த ஆளில்லா ட்ரோன்கள் இயங்கும்.

எதிரியின் வான்பகுதியில் இந்த ஆளில்லா விமானங்களை தங்களது விமானத்தில் பறந்து கொண்டே ஊடுருவ செய்து இலக்குகளை தாக்கி அழிக்க முடியும் மேலும் இதன்மூலம் அந்த ட்ரோன்கள் தாக்கப்பட்டாலும் விமானி அபிநந்தன் சிக்கியது போன்ற நிகழ்வுகளை தடுக்கலாம்.

இந்த திட்டத்தின் ஆரம்பகட்டத்திற்கான நிதி முழுவதையும் HAL நிறுவனமே ஏற்கும் ஒரு பறக்கும் சோதனை ட்ரேனை HAL நிறுவனம் உருவாக்கி விமானப்படைக்கு காட்சிபடுத்திய பின்னர் இந்த திட்டத்தில் விமானப்படையும் இணைந்து கொள்ளும்.

இந்த அமைப்பில் முதன்மையானது தாய்கலன் அதாவது Mothership எனப்படுவது மனிதர்கள் இயக்கும் போர் விமானமாகும் இதற்கு CATS-MAX என பெயரிடப்பட்டுள்ளது ஒரு CATS அணியில் 4 அல்லது அதிகமான CATS – WARRIOR ட்ரோன்கள் இருக்கும்.

இரண்டாவதான இந்த ட்ரோன்கள் ஒவ்வொன்றும் தலா 40 கோடி ருபாய் மதிப்பு கொண்டவை மேலும் 1,600 கிலோ எடையுடன் இருக்கும் இந்த ட்ரோன்கள் 36,000 முதல் 40,000 அடி உயரம் வரை பறக்கக்கூடியவை ஆகும் இவற்றை விமானப்படை Loyal Wingman என அழைக்கிறது.

இரண்டு மணி நேரம் 300 கிலோமீட்டர் தொலைவு வரை பறக்கக்கூடிய இந்த ஆளில்லா விமானங்கள் இரண்டு சுதேசி PTAE-W என்ஜின்களின் சக்தியால் பறக்கும் மேலும் 900 கிலோமீட்டர் தூரம் சென்று தற்கொலை தாக்குதல் நடத்தும் திறனும் கொண்டவை ஆகும்.

மூன்றாவதாக இந்த அமைப்பில் CATS- HUNTER எனப்படும் தாழ்வாக பறக்கும் ஏவுகணைகள் இருக்கும் இவற்றை தாய்கலன்கள் சுமந்து சென்று ஏவி தாக்குதல் நடத்தும் 200 முதல் 300 கிலோமீட்டர் தூரம் செல்லும் இவை 250 கிலோ வெடிபொருளை சுமக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவதாக இந்த அமைப்பில் CATS – ALFA எனப்படும் மிகச்சிறிய ட்ரோன்கள் இருக்கும் இவை நூறு கிலோமீட்டர் தொலைவுக்கு மிதந்து செல்லும் பின்னர் நூறு கிலோமீட்டர் தூரம் வழக்கமான ட்ரோன்களை போல் சென்று தற்கொலை தாக்குதல் நடத்த கூடியவை ஆகும்.

இந்த வகையான சின்னஞ்சிறு ஆளில்லா விமானங்களை CATS – MAX (தாய் கலன்) அல்லது CATS – WARRIOR ஆளில்லா விமானங்கள் ஒரு கலனுக்குள் சுமந்து செல்லும் முடியும்.

மேலும் CATS – INFINITY எனப்படும் சூரிய சக்தியில் இயங்கும், அதிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்ட ஒரு மாதிரி செயற்கைகோளும் அடங்கும் ஆறு மாதங்கள் தொடர்ந்து வானில் பறக்கும் திறன் கொண்ட இது கட்டுபாட்டு மையமாக செயல்படும்.

இதுதவிர ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பிரிவான SLRDC – Strategic Electronics Research & Design Centre என்ற அமைப்பு CATS தொழில்நுடபத்திற்கு தேவையான டிஜிட்டல் தொலைதொடர்பு தொழில்நுட்பம் ஒன்றையும் உருவாக்கி வருகிறது.