இந்தோ பஸிஃபிக் பகுதிக்கு அடிக்கடி போர் கப்பல்களை அனுப்ப முடிவு செய்துள்ள ஜெர்மனி !!

  • Tamil Defense
  • January 4, 2022
  • Comments Off on இந்தோ பஸிஃபிக் பகுதிக்கு அடிக்கடி போர் கப்பல்களை அனுப்ப முடிவு செய்துள்ள ஜெர்மனி !!

ஜெர்மனி நாட்டு அரசு இனி அடிக்கடி இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்திற்கு தனது போர் கப்பல்களை அனுப்ப முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெர்மன் கடற்படையின் ப்ரான்டென்பர்க் ரக ஃப்ரிகேட் கப்பலான பெயர்ன் 20 ஆண்டுகள் கழித்து தென் சீன கடல் பகுதியில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கப்பல் 4,700 டன்கள் எடை கொண்ட நீர்மூழ்கி எதிர்ப்பு கலனாகும் மேலும் வான் பாதுகாப்பு மற்றும் கடல் பரப்பு போர் முறைகளிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது என கூறப்படுகிறது.

இந்த வகை கப்பல்களில் உள்ள லிங்ஸ் ரக ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் மார்க்-46 ரக டார்பிடோக்களை ஏவி நீர்மூழ்கிகளை தாக்கி அழிக்க முடியும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.