சமீபத்தில் ஜெர்மனி நாட்டின் கடற்படையின் தலைமை தளபதி வைஸ் அட்மிரல் அகிம் ஷ்கோன்பேக் இந்தியாவுக்கு சுற்றுபயணமாக வந்தார்.
இந்திய கடற்படை தலைமை தளபதி உள்ளிட்டோரை சந்தித்து பேசிய அவர் IDSA அமைப்பிற்கு சென்று பேசினார் அப்போது அவர் ரஷ்யாவுடன் நெருக்கம் காட்ட வேண்டும் என்ற தொனியில்,
ரஷ்யா மிகப்பெரிய நாடு ரஷ்ய அதிபர் புடினுக்கான மரியாதையை கொடுக்க வேண்டும் ரஷ்யா தனது எல்லையை நேட்டோவுடன் பகிர்வதை விரும்பவில்லை அதன் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கேட்கிறது.
மேலும் சீனா போன்ற நாட்டை தள்ளி வைப்பதற்கு ரஷ்யா நமக்கு தேவை இல்லையென்றால் ரஷ்யாவுடன் சீனா வரத்தகத்தை பெருக்கி ஒட்டி கொள்ளும் என்றார்.
இந்த கருத்து உக்ரைன் மற்றும் ஜெர்மனியில் பலத்த எதிர்வினைகளை உண்டாக்கியது உக்ரைன் ஜெர்மனி தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது அதே நேரத்தில் உக்ரைன் அரசு இது அவருடைய தனிப்பட்ட கருத்து என அறிவித்தது.
இது நடந்த சில மணி நேரத்தில் அகிம் ஷ்கோன்பேக் தனது கருத்து தவறானது என கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார், ஆனால் ஜெர்மனி அரசின் அழுத்ததால் தான் இந்த முடிவை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.