Breaking News

ரஃபேலை விட வலிமையான போர் விமானத்தின் என்ஜின் சோதனை !!

  • Tamil Defense
  • January 17, 2022
  • Comments Off on ரஃபேலை விட வலிமையான போர் விமானத்தின் என்ஜின் சோதனை !!

ஃபிரான்ஸ் எதிர்கால போர் களத்திற்கு உகந்த FCAS – FUTURE COMBAT AIR SYSTEM அதாவது எதிர்கால வான் சண்டை அமைப்பு விமானத்தை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளது.

இந்த புதிய தலைமுறை போர் விமான திட்டத்திற்கு தீடிரென ஒரு மிகப்பெரிய உந்துதல் கிட்டியுள்ளது அதாவது இதற்கான என்ஜின் சோதனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஜனவரி அன்று நிலத்தில் நடைபெற்ற சோதனையில் மேற்குறிப்பிட்ட என்ஜின் வெற்றிகரமாக தனது திறன்களை நிருபித்துள்ளது.

இந்த போர் விமான திட்டத்தில் ஃபிரான்ஸ் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகியவை கூட்டாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.