ரஃபேல் போர் விமானங்களில் கடற்படைக்கென உருவாக்கப்பட்ட பிரத்தியேக ரகமான ரஃபேல் எம் தற்போது ஃபிரெஞ்சு கடற்படையில் சேவையில் உள்ளது.
தற்போது இந்தியா விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலுக்காக கடல்சார் போர் விமானங்களுக்கான தேடலில் ஈடுபட்டுள்ளது.
இந்த போட்டியில் ரஃபேல் எம் ரக போர் விமானமும் இடம்பெற்ற நிலையில் சோதனைகளுக்காக கோவா மாநிலத்தில் உள்ள ஹன்சா படைத்தளத்தை அவை வந்தடைந்தன.
ஃபிரான்ஸ் விமானப்படையின் ஏ330 எரிபொருள் டேங்கர் விமானத்தின் உதவியுடன் நேரடியாக இந்தியா வந்தடைந்துள்ள அவை விரைவில் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன.
கடல்சார் போர் விமானங்கள் என்பவை வால் பகுதியில் ஒரு கொக்கி, மடிக்க கூடிய இறக்கைகள் போன்ற கூடுதல் சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்படுபவை ஆகும்.