காஷ்மீரில் ஐந்து பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய வீரர்கள்

  • Tamil Defense
  • January 30, 2022
  • Comments Off on காஷ்மீரில் ஐந்து பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய வீரர்கள்

காஷ்மீரில் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற இரண்டு என்கௌன்டர்களில் லஷ்கர் மற்றும் ஜெய்ஸ் பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.

காஷ்மீரின் புல்வாமா மற்றும் பத்கம் மாவட்டங்களில் இந்த என்கௌன்டர்கள் நடைபெற்றுள்ளன.புல்வாமாவின் நைரா பகுதியில் நடைபெற்ற என்கௌன்டரில் நான்கு பயங்கரவாதிகளும் பத்கமில் ஒரு பயங்கரவாதியும் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

புல்வாமாவில் வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள் ஜெய்ஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பத்கமில் வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி லஷ்கர் இயக்கத்தை சேர்ந்தவன் ஆவான்.ஐந்து பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டது பாதுகாப்பு படைகளுக்கு மிகப் பெரிய வெற்றி ஆகும்.