உலகிலேயே நீண்ட தூரம் சுடக்கூடிய இந்திய தயாரிப்பு ATAGS பிரங்கியின் இறுதிகட்ட சோதனைகள் !!

  • Tamil Defense
  • January 23, 2022
  • Comments Off on உலகிலேயே நீண்ட தூரம் சுடக்கூடிய இந்திய தயாரிப்பு ATAGS பிரங்கியின் இறுதிகட்ட சோதனைகள் !!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது விரைவில் அது தயாரித்த ATAGS பிரங்கியின் இறுதிகட்ட சோதனைகள் நடைபெற உள்ளதாகவும் அதன் பிறகு படையில் இணைக்கப்படும் எனவும் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த ATAGS Advanced Towed Artillery Gun System எனப்படும் இந்த பிரங்கி தான் உலகிலேயே மிகவும் நீண்ட தூரத்திற்கு சுடும் திறன் கொண்ட பிரங்கியாகும் சுமார் 48 கிலோமீட்டர் தூரத்திற்கு சுடக்கூடியது.

இந்த தகவலை DRDO தலைவர் சதீஷ் ரெட்டி சமீபத்தில் தான் கலந்து கொண்ட கருத்தரங்கு ஒன்றில் கூறினார் மேலும் படிப்படியாக உள்நாட்டு தளவாடங்களை படையில் இணைத்து வருவதாகவும் அவர் கூறினார்.