சிக்கலில் சிக்கியுள்ள ஐரோப்பிய ஆறாம் தலைமுறை போர் விமான திட்டம் !!

  • Tamil Defense
  • January 30, 2022
  • Comments Off on சிக்கலில் சிக்கியுள்ள ஐரோப்பிய ஆறாம் தலைமுறை போர் விமான திட்டம் !!

ஐரோப்பிய நாடுகளான ஃபிரான்ஸ் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகியவை இணைந்து FCAS எனப்படும் ஆறாம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன.

இந்த நிலையில் இந்த திட்டம் ஒரு சிக்கலில் சிக்கியுள்ளது அதாவது ஜெர்மனியின் ஏர்பஸ் நிறுவனம் மற்றும் ஃபிரான்ஸின் டஸ்ஸால்ட் நிறுவனம் ஆகியவை பணிகளை பங்கிட்டு கொள்வதில் முடிவை எட்டவில்லை என தெரிகிறது.

டஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் எரிக் டேப்பியர் கூறும்போது ஜெர்மானியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது சுலபமான விஷயம் இல்லை எனவும் இப்படியே போனால் திட்டம் கைவிடப்படும் என கூறினார்.

அடுத்த தலைமுறையை சேர்ந்த FCAS போர் விமானம் 2040ஆம் ஆண்டில் சேவையில் இணைந்து ஃபிரான்ஸின் ரஃபேல்கள், ஜெர்மனி மற்றும் ஸ்பெயினுடைய யூரோஃபைட்டர் விமானங்களுக்கு மாற்றாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.