காஷ்மீர் என்கவுன்டர்; 1 காவலர் வீரமரணம், 1 பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான் !!

  • Tamil Defense
  • January 17, 2022
  • Comments Off on காஷ்மீர் என்கவுன்டர்; 1 காவலர் வீரமரணம், 1 பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான் !!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டதின் பரிவான் பகுதியில் பயங்கரவாதிகள் பற்றிய துப்பு கிடைத்த நிலையில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர்.

அப்போது பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்து என்கவுன்டராக மாறி துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

இந்த சண்டையில் காவலர் ரோஹித் சிப் வீரமரணம் அடைந்தார், 3 ராணுவத்தினர் காயமடைந்தனர், 1 ஜெய்ஷ் பயங்கரவாதியும் கொல்லப்பட்டான்.