காஷ்மீரில் மால் அமைக்கும் துபாய் அரச குடும்பம் பாகிஸ்தானுக்கு செக் !!

  • Tamil Defense
  • January 7, 2022
  • Comments Off on காஷ்மீரில் மால் அமைக்கும் துபாய் அரச குடும்பம் பாகிஸ்தானுக்கு செக் !!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரை மையமாக கொண்டு இயங்கும் மிகப்பெரிய குழுமம் தான் எமார் இது துபாய் அரச குடும்பத்துக்கு சொந்தமானது.

தற்போது இந்த நிறுவனம் ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்ய உள்ளது அதாவது 5 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட உலக தரத்திலான மால் ஒன்றை கட்டமைக்க உள்ளது.

இதில் சிறப்புமிக்க விஷயம் என்னவென்றால் இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் வேலை வாய்ப்புகள் உருவாகும் மேலும் உள்ளூர் பொருளாதாரம் மேம்படும், மேலும் தொழில்கள் ஈர்க்கப்படும்.

ஆகவே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த மாலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் துபாய் அரச குடும்பத்தின் கோபத்திற்கு பாகிஸ்தான் ஆளாக வேண்டி இருக்கும்.

இந்த எமார் குழுமம் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் காலிஃபா மற்றும் உலகின் மிகப்பெரிய மால் ஆன துபாய் மால் ஆகியவற்றின் உரிமையாளர் என்பது கூடுதல் தகவல் ஆகும்.