இந்திய நிறுவனத்திற்கு பயிற்சிகளுக்கான இலக்கு ட்ரோன்கள் வழங்கும் ஒப்பந்தம் !!

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தரைப்படையின் வான் பாதுகாப்பு படைப்பிரிவு மற்றும் இந்திய விமானப்படைக்கான இலக்கு ட்ரோன்களை வாங்க ஒப்பந்தம் இறுதி செய்துள்ளது.

வான் பாதுகாப்பு பயிற்சிகளின் போது எதிரி விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை போல செயல்படும் ஷிக்ரா-பான்ஷி ஜெட் என்ஜின் திறன் கொண்ட ட்ரோன்களை வாங்க உள்ளனர் இந்த ஒப்பந்தம் 96 கோடி ருபாய் மதிப்பு கொண்டதாகும்.

இந்திய தனியார் நிறுவனமான அனட்ரான் சிஸ்டம்ஸ் மற்றும் இங்கிலாந்தின் க்யூனைட்டிக் க்யூ டார்கெட் சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்களால் கூட்டாக தயாரிக்கப்பட்டதாகும்.

தொடர்ந்து 65 நிமிடங்களுக்கு நூறு கிலோமீட்டர் தொலைவுக்கு 26,000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த ஆளில்லா விமானத்தை அனட்ரான் சிஸ்டம்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.