பிரிட்டனிடம் தஞ்சம் புகுந்த சீன விஞ்ஞானி; வெளிவந்த சீனாவின் அதிநவீன ஏவுகணையின் ரகசியங்கள் சீனாவுக்கே அல்வா !!

  • Tamil Defense
  • January 25, 2022
  • Comments Off on பிரிட்டனிடம் தஞ்சம் புகுந்த சீன விஞ்ஞானி; வெளிவந்த சீனாவின் அதிநவீன ஏவுகணையின் ரகசியங்கள் சீனாவுக்கே அல்வா !!

சீனாவின் அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணை திட்டத்தில் பணியாற்றிய சீன விஞ்ஞானி ஒருவர் தற்போது பிரிட்டன் வழியாக அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்துள்ளார்.

இவர் பணியாற்றிய ஏவுகணை திட்டம் வெற்றியடைந்த பின்னர் கூட சீன ஆட்சியாளர்களுக்கு எதிரான இவரது நிலைபாட்டால் இவருக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது.

இதனால் விரக்தி அடைந்த அவர் ஹாங்காங் நகரில் உள்ள பிரிட்டிஷ் உளவு அமைப்பான MI6 அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஹைப்பர்சானிக் ஏவுகணையின் ரகசியங்கள் தெரியும் என்றார்.

தான் மாட்டி கொண்டால் கொல்லப்படுவோம் என்பதை அறிந்த அவர் தனக்கும் தனது குடும்பத்திற்கும் அடைக்கலம் கோரினார், ஆனாலும் சீனாவின் தந்திரமாக இருக்கும் என பிரிட்டிஷ் அதிகாரிகள் காலம் தாழ்த்தினர்.

இதனை தொடர்ந்து ஏவுகணை பற்றிய ரகசியங்களை சிறிது வெளியிட்டதும் அவரின் நம்பகத்தன்மையை உறுதி செய்த பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரிகள் அவரையும் அவரது குடும்பத்தையும் ஹாங்காங் கொண்டு வந்தனர்.

அங்கு பிரிட்டிஷ் MI6 மற்றும் அமெரிக்க CIA உளவுத்துறை அதிகாரிகள் கூட்டாக ஜெர்மனியில் உள்ள ராம்ஸ்டெய்ன் அமெரிக்க விமானப்படை தளம் சென்று இங்கிலாந்து வழியாக அமெரிக்கா கொண்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து பெய்ஜிங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சீனாவின் ஏவுகணைகளை தடுக்கும் வழிகளை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அறிந்து கொள்ளும் இது சீனாவுக்கு பெருத்த பின்னடைவாகும் என்பதில் சந்தேகமில்லை.