சீனாவின் ஜே-20 ஸ்டெல்த் போர் விமானம் போருக்கு தயார் சீனா அறிவிப்பு !!

  • Tamil Defense
  • January 21, 2022
  • Comments Off on சீனாவின் ஜே-20 ஸ்டெல்த் போர் விமானம் போருக்கு தயார் சீனா அறிவிப்பு !!

சீனா சொந்தமாக தயாரித்த ஜே-20 ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமானது தற்போது போர் நடவடிக்கைகளில் ஈடுபட தயார் அந்நாட்டு அரசு ஆதரவு ஊடகமான க்ளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது ஜே-20 போர் விமானங்கள் சீன ராணுவத்தின் வடக்கு கட்டளையகத்தில் சேவையில் உள்ளன, மேலும் சீன விமானப்படையின் இரண்டு படையணிகள் இந்த விமானங்களை இயக்கி வருகின்றன.

பார்வைக்கு அப்பால் உள்ள இலக்குகளை குறிவைத்து தாக்கவும், இரவிலும் இயங்கவும் அனைத்து கால நிலைகளிலும் இயங்கவும் இந்த விமானத்தால் முடியும் என கூறப்படுகிறது.

சீனா இந்தியா மற்றும் தைவானுடன் தீவிர மோதல் போக்கை கொண்டிருக்கும் நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.