சீன ஜே-16 விமானங்களுக்கு சவால் விடும் தைவானின் புதிய எஃப்-16 விமானங்கள் !!

  • Tamil Defense
  • January 8, 2022
  • Comments Off on சீன ஜே-16 விமானங்களுக்கு சவால் விடும் தைவானின் புதிய எஃப்-16 விமானங்கள் !!

டிசம்பர் 5 ஆம் தேதி தைவான் நாட்டின் விமானப்படை ஒரு போர் ஒத்திகை பயிற்சியை நடத்தியது இதில் புதிதாக படையில் இணைந்த எஃப்-16 வைப்பர் ரக போர் விமானங்கள் பங்கேற்றன.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில் தைவான் நாட்டு விமானப்படையின் போர் தயார்நிலை பல்வேறு வகையான நடவடிக்கைகள் மூலமாக சோதித்து அறியப்பட்டது.

அப்போது சீன விமானப்படையின் ஜே-16 ரக போர் விமானங்கள் தைவான் எல்லையில் ஊடுருவுவது போன்றும்

உடனடியாக அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தைவான் விமானப்படையின் எஃப்-16 போர் விமானங்கள் புறப்பட்டு சென்று சீன விமானங்களை வீழ்த்தியது போல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தைவான் கடந்த நவம்பரில் 64 எஃப்-16 வைப்பர் விமானங்களை படையில் இணைத்தது மேலும் ஏற்கனவே படையில் உள்ள 141 எஃப்-16 ஏ/பி ரக போர் விமானங்களை மேம்படுத்தவும் திட்டமிட்டு உள்ளது.

ஒட்டுமொத்தமாக தைவான் நாட்டின் விமானப்படையில் எஃப்-16, மிராஜ்-2000, எஃப்.சி.கே – சிங் ஹூவோ ஆகிய விமானங்களை உள்ளடக்கி 400 சண்டை விமானங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.