ரஷ்யாவின் கருத்தை ஏற்று கொள்ள வேண்டும் உக்ரைன் விவகாரத்தில் சீனா அமெரிக்காவுக்கு அறிவுரை !!

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆந்தணி ப்ளிங்கென் உடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

அப்போது அவர் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் கருத்தை மதிக்க வேண்டும் எனவும், இரண்டு தரப்பும் பனிப்போர் கால எண்ணங்களை விட்டுவிட வேண்டும் எனவும் அறிவுரை கூறியுள்ளார்.

மேலும் பெய்ஜிங் பனிக்கால ஒலிம்பிக்ஸில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் உய்குர் மக்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளன,

இதனால் சிறப்பான நிகழ்வாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற சீன அரசின் எண்ணத்திற்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ள நிலையில் இத்தகைய போக்கை கைவிட வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.