பூட்டான் எல்லையோரம் சீன கட்டுமானங்கள் டோக்லாம் பகுதிக்கு வைத்த குறியா ??

  • Tamil Defense
  • January 13, 2022
  • Comments Off on பூட்டான் எல்லையோரம் சீன கட்டுமானங்கள் டோக்லாம் பகுதிக்கு வைத்த குறியா ??

சீனா பூட்டான் இடையேயான எல்லையோர பகுதியில் 177 சதுர கிலோமீட்டர் பகுதி இரண்டு நாடுகளும் உரிமை கோரி வரும் சர்ச்சைக்குரிய பகுதி ஒன்று உள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா தற்போது கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது அதாவது சாலை வசதியுடன் கூடிய ஒரு கிராமத்தை நிர்மாணம் செய்து வருகிறது.

2020ஆம் ஆண்டு துவங்கிய பணிகள் 2021ஆம் ஆண்டு வேகம் அடைந்த நிலையில் ஏறத்தாழ 200 கட்டிடங்கள் சீனாவால் அமைக்கப்பட்டு இருப்பது அமெரிக்க செயற்கைகோள் புகைப்படங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது.

மேலும் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த பகுதி டோக்லாமில் இருந்து வெறுமனே 27 கிலோமீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளது.

இங்கிருந்து சீன படைகளால் தொலைதூர பகுதிகளுக்கு சென்று இயங்கவும் கண்காணிக்கவும் முடியும் மேலும் வருங்காலத்தில் ராணுவ தளங்களும் அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.