1 min read
தைவானை நோக்கி அதிக அளவு போர்விமானங்களை அனுப்பி மிரட்டிய சீனா
இந்த வருடத்தின் அதிகபட்சமாக கிட்டத்தட்ட 39 போர் விமானங்களை தைவானை நோக்கி அனுப்பி சீனா மிரட்டியுள்ளது.தைவானும் வழங்கமான முறையில் தனது போர்விமானங்களை அனுப்பி சீன விமானங்களை வழிமறித்துள்ளது.
உதவிகர விமானங்களுடன் 24 ஜே-16 மற்றும் பத்து ஜே-10 விமானங்களை சீனா தைவானை நோக்கி அனுப்பியுள்ளது.கடந்த ஒன்றறை வருடங்களாகவே சீனா தொடர்ந்து போர் விமானங்களை அனுப்பி தைவானை தொடர்ந்து மிரட்டி வருகிறது.கடந்த அக்டோபரில் ஒரே முறையாக 50க்கும் மேற்பட்ட போர்விமானங்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கது ஆகும்.
தைவான் என்ற முழு நாட்டை தன்னுடையது என சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது.ஆனால் தைவானோ தாங்கள் தனிநாடு என கூறி வருகிறது.