
இந்தியா சமீபத்தில் ரஷ்யாவிடம் இருந்து தனது முதல் இரண்டு எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை பெற்று கொண்டது தற்போது இவற்றை செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் சீனா இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு DONG FENG – 17 எனப்படும் அணு ஆயுத தாக்குதல் திறன் கொண்ட ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை வழங்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஏவுகணைகள் சுமார் 2500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்க வல்லவை மேலும் இவை மணிக்கு 6,174 கிலோமீட்டர் வேகத்தில் (மாக் 5) பறக்கும் ஆற்றல் கொண்டவை மேலும் எஸ்-400 அமைப்பால் ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை தடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் தந்திரமாக சீனா இந்த நடவடிக்கையை மேற்கொண்டாலும் பாகிஸ்தானும் பெற்று கொள்ள விரும்பினாலும் அந்நாட்டு பொருளாதாரம் இதனை வாங்க அனுமதிக்கும் நிலையில் இல்லாத போது இதனை பாக் எப்படி வாங்கும் என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் ஹ