
அருணாச்சல பிரதேச மாநிலம் மேல் சியாங் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் மிராம் டாரோமை காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்ற போது சீன ராணுவத்தினர் கடத்தி உள்ளனர்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சீன வெளியுறவு துறை அமைச்சகம் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தெரியவில்லை என மறுப்பு தெரிவித்து விட்டு
சீன மக்கள் விடுதலை ராணுவம் எல்லை பகுதிகளை சட்டத்திற்கு உட்பட்டு மதிப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் தங்களது பகுதியில் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஐந்து இந்திய வேட்டைகாரர்களை கைது செய்த சீன ராணுவம் அவர்களை விடுவிக்க இந்தியா கோரிக்கை விடுத்த போது அவர்கள் உளவாளிகள் என மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.