சீன எல்லையோரம் வழக்கமாகி போன படை குவிப்பு நிலை !!

  • Tamil Defense
  • January 10, 2022
  • Comments Off on சீன எல்லையோரம் வழக்கமாகி போன படை குவிப்பு நிலை !!

இந்தியா சீனா இடையேயான எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் படைகுவிப்பு மற்றும் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் வழக்கமாகி உள்ளன.

கடந்த 18 மாதங்களாக 3488 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்திய சீன எல்லை பகுதியில் டாங்கிகள், பிரங்கிகள், கவச வாகனங்கள், படை வீரர்கள் போன்றை குவிக்கபட்டு வந்த நிகழ்வுகள் இனியும் தொடரும்.

முன்பு எப்போதாவது ஒருமுறை நடைபெற்ற இத்தகைய நிகழ்வுகள் இனி வழக்கமாக நடைபெறுவது தான் என்ற நிலையை தற்போது எட்டியுள்ளது மேலும் சீனாவும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு மனப்பான்மையிலேயே செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

வருகிற 12 ஆம் தேதி நடைபெற உள்ள 14ஆவது சுற்று கோர் கமாண்டர்கள் பேச்சுவார்த்தையின் போது 832 கிலோமீட்டர் எல்லை கட்டுபாட்டு கோடு மற்றும் 972 சதுர கிமீ தெப்சாங் பகுதிளை ஒட்டியுள்ள படையினர் வெளியேற வேண்டும் என வலியுறுத்தப்பட உள்ளது.

மேலும் இந்தியா மூன்று வகையான நடவடிக்கைகளை முன்வைக்கிறது அதாவது படைகளை பின் நகர்த்துவது, படைகளை குறைப்பது மற்றும் படைகளை விலக்கி கொள்வது இந்த மூன்றையும் இந்திய அதிகாரிகள் வலியுறுத்தி பேச உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.