
சீனா சமீபத்தில் கல்வானில் புத்தாண்டை ஒட்டி தனது தேசிய கொடியை ஏற்றியதாக ஒரு காணொளியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து அடுத்த சில நாட்களில் ஒரிஜினல் கல்வான் பகுதியில் இந்திய தரைப்படை வீரர்கள் தேசிய கொடி ஏற்றிய புகைப்படம் ராணுவத்தால் வெளியிடப்பட்டது.
ஆக சீனா தங்களது பகுதியில் வீடியோ எடுத்த கல்வான் பள்ளதாக்கில் கொடியேற்றியதாக போலி வீடியோவை வெளியிட்டது அம்பலமான நிலையில் தற்போது
சீனா அந்த காணொளியை நடிகர்களை பயன்படுத்தி எடுத்ததும் இந்த ஷூட்டிங் கல்வானில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் நான்கு மணிநேரம் நடைபெற்றதும் தெரிய வந்துள்ளது.
இந்த தகவல் அந்நாட்டு சமுக வலைதளமான வெய்போவில் வெளியாகி உள்ளது சீனாவில் எடுக்கப்பட்ட அதிக பட்ஜெட் திரைப்படமான “பேட்டில் அட் லேக் சாங்ஜின்” படத்தில் நடித்த வூ ஜூங்
மற்றும் அவரது மனைவியும் சீன தொலைக்காட்சி நடிகையுமான, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஷி நான் ஆகியோரை அந்த வீடியோவில் அடையாளம் கண்டு சீன வெய்போ பயனாளிகள் பதிவிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து இந்த தகவலை பதிவிட்ட பலருடைய வெய்போ கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாகவும் பலர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.