அமெரிக்காவை விட அதிநவீனமான ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் மற்றும் வெப்ப உணர் தொழில்நுட்ப அமைப்புகளை உருவாக்கிய சீனா !!

  • Tamil Defense
  • January 3, 2022
  • Comments Off on அமெரிக்காவை விட அதிநவீனமான ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் மற்றும் வெப்ப உணர் தொழில்நுட்ப அமைப்புகளை உருவாக்கிய சீனா !!

இலக்குகளை வெப்பத்தை கொண்டு அடையாளம் கண்டு தாக்கி அழிக்கும் வெப்ப உணர் தொழில்நுட்பத்தை கொண்ட ஹைப்பர்சானிக் ஏவுகணைகளால் எதிர்கால போர்முறை மிகப்பெரிய மாற்றம் அடைய உள்ளது.

இத்தகைய அதிநவீனமான ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை உருவாக்கி உள்ளதாக சீன விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர், தற்போதைய நிலையில் 2025 வரை அமெரிக்க ராணுவம் கூட இத்தகைய ஆயுதங்களை பெறாது எனவும் கூறப்படுகிறது.

இத்தகைய ஏவுகணைகளை கொண்டு ஸ்டெல்த் போர் விமானங்கள், ஸ்டெல்த் போர் கப்பல்கள், விமானந்தாங்கி கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நவீன இலக்குகளை தாக்க முடியும் என்பது சிறப்பாகும்.