கடும் குளிரை சமாளிக்க முடியாமல் திணறும் சீன வீரர்கள், ரோபோட்டுகளை களமிறக்கும் சீனா !!

  • Tamil Defense
  • January 1, 2022
  • Comments Off on கடும் குளிரை சமாளிக்க முடியாமல் திணறும் சீன வீரர்கள், ரோபோட்டுகளை களமிறக்கும் சீனா !!

இந்திய சீன எல்லையோரம் தொடர்ந்து பிரச்சினை நீடித்து வரும் நிலையில் தற்போது சீன தரைப்படை இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட ரோபோட்டுகளை களமிறக்கி உள்ளது.

இது தவிர ஆயுதங்கள் மற்றும் சப்ளைகளை கள முன்னனிக்கு கொண்டு செல்லும் தானியங்கி வாகனங்களையும் களமிறக்கி குறிப்பாக இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சனை நிலவும் பகுதிகளில் களமிறக்கப்பட்டுள்ளன.

SHARP CLAW எனப்படும் இந்த ரோபோட் ஆனது இலகுரக தானியங்கி துப்பாக்கி பொருத்தப்பட்டது இதனை வயர்லெஸ் முறையிலும் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் MULE-200 எனப்படும் தானியங்கி போக்குவரத்து வாகனமும் பயன்படுத்தி வரப்படுகிறது தற்போது 120 முதல் 200 தானியங்கி வாகனங்கள் திபெத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூடுதலாக எழுபது VP-22 கவச வாகனங்கள் மற்றும் 150 LYNX அனைத்து நிலப்பரப்பு வாகனங்களும் சீன தரைப்படையால் பயன்படுத்தி வரப்படுகிறது.