இந்திய ஆபரேஷன்களை தடுக்க பாங்காங் ஸோ ஏரி மீது பாலம் கட்டும் சீன ராணுவம் !!

  • Tamil Defense
  • January 3, 2022
  • Comments Off on இந்திய ஆபரேஷன்களை தடுக்க பாங்காங் ஸோ ஏரி மீது பாலம் கட்டும் சீன ராணுவம் !!

கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் இந்திய தரைப்படை பாங்காங் ஸோ ஏரியின் தெற்கு பகுதியில் உள்ள மலை சிகரங்களை ஒரு ராணுவ நடவடிக்கை மூலம் கைபற்றி சீனாவுக்கு செக் வைத்தது.

தற்போது இதை போன்ற இந்திய ராணுவ ஆபரேஷன்களை எதிர்காலத்தில் தடுக்கும் விதமாக பாங்காங் ஸோ ஏரியில் குறுக்கே பாலம் ஒன்றை சீன ராணுவம் கட்ட உள்ளது.

தற்போது ஏதேனும் அவசரம் என்றால் கூட சுமார் 180 கிலோமீட்டர் ஏரிக்கரையை சுற்றி தான் செல்ல வேண்டிய நிலை சீனர்களுக்கு உள்ளது இந்த தூரத்தை 50 கிலோமீட்டராக பாலம் குறைக்கும்.

இந்த பாலம் ஏரியின் மிகவும் குறுகிய பகுதியில் கட்டப்பட்டு வருவதாக நம்பதகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.