பாங்காங் ஏரிக்கு குறுக்கே பாலம் கட்டுவதை தனது உரிமையென நியாயபடுத்தும் அடாவடி சீனா !!

பாங்காங் ஸோ ஏரியின் குறுகிய பகுதியில் ஏரிக்கு குறுக்கே வடக்கு மற்றும் தெற்கு கரைகளை இணைக்கும் விதமாக சீன ராணுவம் ஒரு பாலத்தை கட்டி வருகிறது.

இந்த நிலையில் பாங்காங் ஸோ சீனாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அக்சாய் சின் பகுதியில் உள்ளது இதையடுத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.

அதாவது சீனா கடந்த 60 ஆண்டு காலமாக சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதியில் பாலம் கட்டி வருவதாகவும் இந்த ஆக்கிரமிப்பு மற்றும் கட்டுமான பணிகளை ஏற்று கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளது.

மேலும் இந்தியா தொடர்ந்து சீன நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்திய நலன்களை பாதுகாக்க பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.

இந்த நிலையில் சீனா இதற்கு பதிலடியாக அந்த கட்டுமான பணிகளை நியாயபடுத்தி உள்ளது மேலும் சீன நலன்களை பாதுகாக்க எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளது.