
சமீபத்தில் சீனா தனது கடற்படை பயன்படுத்தி வந்த ஒரு பழைய நீர்மூழ்கி கப்பல் ஒன்றை மியான்மர் கடற்படைக்கு வழங்கிய நிலையில் தற்போது மற்றொரு திட்டத்தை மியான்மரில் செயல்படுத்தி வருகிறது.
அதாவது சீனா ஒரு மிகப்பெரிய கப்பல் தளத்தை மியான்மரில் கட்டி வருகிறது, சுமார் 40,000 டன்கள் எடை கொண்ட கப்பல்களை இதனால் சுமக்க முடியும்.
ஆனால் மிக மிக சிறிய போர் கப்பல்களை கொண்ட மியான்மர் கடற்படைக்கு இத்தகைய கப்பல் தளம் தேவையில்லை தற்போது மியான்மர் கடற்படை தென்கொரிய தயாரிப்பு கப்பல் தளம் ஒன்றை பயன்படுத்தி வருகிறது.
எது எப்படியோ இதன் மூலம்க மியான்மர் கடற்படை பெரிய போர் கப்பல்களை படையில் இணைக்க உள்ளதா என்றும் அல்லது சீன கப்பல்களுக்காக கட்டப்படுகிறதா எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.