17 வயது இந்திய இளைஞர் சீன ராணுவத்தால் கடத்தப்பட்ட விவகாரம் !!
அருணாச்சல பிரதேச மாநிலத்தின் மேல் சியாங் மாவட்டத்தின் பிஷிங் கிராமத்தின் அருகே உள்ள லுங்டா ஜோர் பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் சீன ராணுவத்தால் 18ஆம் தேதியன்று கடத்தப்பட்டு உள்ளார்.
கடத்தப்பட்ட இளைஞரும் அவரது நண்பரும் இந்திய எல்லைக்குள் காட்டு பகுதியில் வேட்டையாட சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது சீன ராணுவத்திடம் இருந்து அவரது நண்பர் மற்றும் தப்பி வந்த நிலையில் அருணாச்சல் கிழக்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தபிர் காவோ இதனை வெளி கொண்டு வந்துள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவற்றிற்கு கடத்தப்பட்டவரை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்துள்ள நிலையில் இந்திய தரைப்படையும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சமீபத்திய தகவல்களின்படி இந்திய ராணுவம் சீன ராணுவத்தை தொடர்பு கொண்டுள்ளதாகவும் விரைவில் கடத்தப்பட்ட நபரை இந்திய தரப்பிடம் ஒப்படைக்குமாறு கோரி உள்ளதாகவும் தெரிகிறது.