தேசிய பாதுகாப்பு படையில் (NSG) பணியாற்றி வந்த ஒரு எல்லை பாதுகாப்பு படை (BSF) அதிகாரி சுமார் 150 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த அதிகாரி தனது சகோதரியின் கணவருடன் சேர்ந்த போலி பத்திரங்கள் தரவுகளை தயாரித்து பல்வேறு நபர்களை ஏமாற்றி 150 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
அதாவதுதேசிய பாதுகாப்பு படையின் தலைமையகம் அமைந்துள்ள மானேசர் முகாமில் பல்வேறு கட்டிட பணிகள் உள்ளதாக கூறி கட்டிட பொறியாளர்களை ஏமாற்றி உள்ளனர்.
இவர்கள் அமெரிக்கா அல்லது இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஏதேனும் ஒன்றிற்கு தப்பி செல்ல முயன்ற போது காவல்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.