
பஞ்சாப் மாநிலத்தில் சட்லஜ் நதி பாய்ந்து வருவது அனைவருக்கும் தெரியும் இந்த நதி பாகிஸ்தானுடைய பஞ்சாப் வழியாக சென்று அரபி கடலில் கலக்கிறது.
இந்திய பகுதிக்குட்பட்ட சட்லஜ் நதி கரையோரம் நமது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணி மேற்கொள்வது வழக்கம்,
சமீபத்தில் அந்த வகையில் ரோந்து பணி மேற்கொள்ளும் போது ஒரு கைவிடபட்ட பாகிஸ்தானிய படகை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டறிந்தனர்.
இதையொட்டி படகை சோதனையிட்ட போது சந்தேகத்திற்கு உரிய எந்த பொருளும் கிடைக்கவில்லை எனினும் படகை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.