2021ஆம் ஆண்டில் வங்கதேச எல்லையோரம் சுமார் 47 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை கைபற்றிய BSF !!

  • Tamil Defense
  • January 23, 2022
  • Comments Off on 2021ஆம் ஆண்டில் வங்கதேச எல்லையோரம் சுமார் 47 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை கைபற்றிய BSF !!

கடந்த ஆண்டில் எல்லை பாதுகாப்பு படை சுமார் 47 கோடி ரூபாய் மதிப்பிலான பேதை பொருட்களை வங்கதேச எல்லையோரம் கைபற்றி உள்ளதாக அப்படையின் ஐஜி மிருதுல் சோனோவால் தெரிவித்துள்ளார்.

கச்சார் மற்றும் மிசோரம் பகுதிக்கான படைப்பரிவு சுமார் 6 லட்சம் யாகா மாத்திரைகள், 340 கால்நடை தலைகள், 480 கிலோ கஞ்சா, 150 கிலோ கஞ்சா என ஒட்டுமொத்தமாக 47 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

1.9 கிலோ ஹெராயின், 609 கிராம் ப்ரவுன் சுகர் , 1569 மது பாட்டில்களும், துப்பாக்கிகள் தோட்டாக்கள், வெட்டரிவாள்களும் அடக்கம் என அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் காவல்துறை, வருவாய் உளவுத்துறை, போதை பொருள் தடுப்பு பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொண்டதாகவும் வருங்காலத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் எனவும் கூறினார்.