நேற்று நாட்டின் 73ஆவது குடியரசு தினம் கோலாகலமாக தலைநகர் தில்லியில் பிரமாண்ட ராணுவ மற்றும் கலாச்சார அணிவகுப்புடன் கொண்டாப்பட்டது.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் அட்டாரி வாகா எல்லை சாவடியோரம் இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படை மற்றும் பாகிஸ்தானுடைய பஞ்சாப் ரேஞ்சர்கள் இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.
இதனை தொடர்ந்து இரு தரப்பு அதிகாரிகள் மற்றும் வீரர்கள் புகைப்படம் எடுத்து கொண்டு பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு விடை பெற்றனர்.