
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் உடனான சர்வதேச எல்லையோரம் எல்லை பாதுகாப்பு படை கண்காணிப்பை பலப்படுத்த அதிக அளவில் வீரர்களை குவித்துள்ளது.
200 கிலோமீட்டர் நீளம் கொண்ட சர்வதேச எல்லையோரம் அதிநவீன கண்காணிப்பு கருவிகளுடன் பனிக்காலத்தை பயன்படுத்தி பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க எல்லை பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
உஜ், பஸந்தார் மற்றும் செனாப் ஆகிய ஆற்று படுகை பகுதிகளை வீரர்கள் முற்றிலும் முடக்கி உள்ளதாகவும் இரவு நேர கண்காணிப்பு பயிற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.